Saturday, March 24, 2012

அகீகாவின் சட்டங்கள் பகுதி- 02

ஆடுதான் அறுக்க வேண்டுமா ?
நபி(ஸல்) அவர்கள் “யார் தன்னுடைய குழந்தைக்காக அறுத்துப் பலியிட விரும்புகின்றாறோ அவர் அறுத்துப் பலியிடட்டும், ஆண் குழந்தையாயின் இரண்டு ஆடுகளும், பெண் குழந்தையாயின் ஒரு ஆடும் கொடுக்கட்டும் எனக் கூறினார்கள்”
(ஆதாரம் : அபூ தாவுத் 2842, நஸாயீ 188, அஹ்மத்182,183;)

அகீகாவின் சட்டங்கள் பகுதி- 01


மனித சமுதாயத்துக்கு கொடுக்கப்பட்ட செல்வங்களில் ஒன்றுதான் குழந்தைச் செல்வம். அன்று தொட்டு இன்று வறை அச் செல்வங்களைக் கொண்டு சந்தோசம் அடைபவர்களும் உண்டு, கவலையடைபவர்களும் உண்டு

Thursday, March 22, 2012

முதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு part-18

ரோமர்களின் படையெடுப்பு

ஜர்ஜா இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுதல்

ரோமர்களை வெற்றி கொள்ளுதல்

மேற்கண்ட மூன்று தலைப்புக்களில் வரும் சம்பவங்கள் அனைத்தும் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. தயவுசெய்து காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் வரலாற்றை இதே இணையத்தளத்தில் உள்ள வரலாறு என்னும் பகுதியில், ''இஸ்லாமிய போர்ப் படைத் தளபதிகள்"" என்னும் தலைப்பில் காண்க.

முதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு part-17

காலித் பின் வலீத்

பெர்ஸியாவைக் கைப்பற்றியதில் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் பங்கு மகத்தானது. பொய்த்தூதர்கள் முறியடிக்கப்பட்டதன் பின்பு, அபுபக்கர் (ரலி) அவர்கள் பெர்ஸியாவைக் கைப்பற்றும் பொறுப்பை காலித் பின் வலீத் (ரலி) அவர்களிடம் கொடுத்ததோடு, காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் தலைமையில் 10 ஆயிரம் வீரர்களையும், அதன் பின் மதன்னா (ரலி)

முதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு part-16

ஈராக் மீதான படையெடுப்பு

பொய்த்தூதர்களை ஒரு வழியாக அடக்கி விட்டதன் பின்பு, இப்பொழுது கலீபா அபுபக்கர் (ரலி) அவர்கள், ஈராக்கின் தனது கவனத்தைத் திசை திருப்பினார்கள். இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் மிகப் பெரும் எதிரிகளாக விளங்கிய பைஸாந்தியம் மற்றும் பெர்ஸியப் படைகள் முஸ்லிம்களின் ஆட்சிப்

முதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு part-15

முஸைலமா என்ற பொய்யன்

பொய்த்தூதர்களை முறியடிப்பதற்காக புறப்பட்ட இஸ்லாமியப் படைகள் மிகவும் கடுமையானதொரு போராட்டத்திற்கு முகம் கொடுக்க வேண்டியதிருந்தது. எந்தப் போரும் மிகவும் எளிதாக இருக்கவில்லை. அதிலும் பனூ ஹனீஃபா கோத்திரத்தைச் சேர்ந்தவனும், நஜ்துப் பிரதேசத்தின் யமாமாப் பகுதியின் முஸைலமா வினை எதிர்த்து முஸ்லிம்கள் தொடுத்த போரானது மற்ற போர்களை விடவும் மிகக் கடுமையான போராக இருந்தது.

முதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு part-14

பனீ தயீ

காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் இந்த பனீ தயீ என்ற குலத்தை எதிர்ப்பதற்காக அனுப்பி வைக்கப்டடார்கள், இந்தக் குலத்தவர்கள் துலைஹா என்ற பொய்யனுக்கு ஆதரவளித்து வந்தார்கள். காலித் பின் வலீத் (ரலி) அவர்களை அனுப்பி வைக்கப்படுவதற்கு முன்பதாக, அதி பின் காதிம் (ரலி) அவர்களை அபுபக்கர் (ரலி) அவர்கள் இந்தக் கோத்திரத்தவர்களிடம் அனுப்பி வைத்தார்கள்.

முதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு part-13


பொய்த் தூதர்கள் கொல்லப்படுதல்

இப்பொழுது உஸாமா (ரலி) அவர்களின் தலைமையில் சென்ற படை மதீனாவில் இருந்து நிறைவாக ஓய்வெடுத்திருந்தது, நாட்டின் பல பாகங்களில் இருந்தும் தேவையான அளவுக்கு ஜகாத் - லிருந்து நிதியும் வந்து சேர்ந்திருந்தது. இப்பொழுது அப்ரக் கில் தங்கிக் கொண்டு, பொய்த் தூதர்களின் அட்டகாசங்களை அடக்குவதற்குண்டான தயாரிப்புகளைச் செய்ய

முதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு part-12

மதீனாவின் மீதான தாக்குதல் முறியடிப்பு

அபுபக்கர் (ரலி) அவர்கள் மதீனாவைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளைத் தானே முன்னின்று செய்ய ஆரம்பித்தார்கள். அலீ (ரலி), சுபைர் (ரலி), தல்ஹா (ரலி), மற்றம் அப்துல்லா பின் மஸ்ஊத் (ரலி) ஆகியோர்களை நகரின் முக்கியப் பகுதிகளின் பாதுகாப்புப் பொறுப்பை வழங்கி, அவர்களின்

முதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு part-11

பொய்த் தூதர்கள்

மக்காவின் வெற்றிக்குப் பின்பு, இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்காக பல்வேறு குலத்தவர்கள் வந்தார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்ட தூதர்கள் மூலம், அந்தப் பிரதேசத்து மக்கள் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். அவ்வாறே முஸைலமா வாழ்ந்த பகுதியான எமன் மக்களும்

முதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு part-10

பைஅத் அல்லது உறுதிப்பிரமாணம்

இதனை அடுத்து வந்த (செவ்வாக் கிழமை) தினத்தில், பொதுமக்களிடம் பைஅத் என்ற உறுதிப்பிரமாணம் பெறப்பட்டது. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பள்ளியின் முன்னால் பொதுமக்கள் திரளாகக் குழுமிய பின், அவையினருக்கு மிம்பரில் இருந்து கொண்டு உமர் (ரலி) அவர்கள் உரையாற்ற ஆரம்பித்தார்கள் :

முதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு part-09

தேர்தல்

இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பள்ளியில் அன்ஸார்கள் ஒன்று கூடி இருந்து கொண்டிருந்த பொழுது, அபுபக்கர் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து, அன்ஸார்கள் இப்பொழுது சகீஃபா பனீ சஃதா வில் திரண்டிருக்கின்றார்கள், அவர்கள் அங்கு அடுத்த கலீஃபா யார் என்பது பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார்கள், நிலைமை முற்றி அதன் பின் நடவடிக்கை

முதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு part-08

பேரருளானை நோக்கி...

நோய் சில வேளைகளில் அதிகரிப்பதும் சில வேளைகளில் குறைவதுமாக இருந்தது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வாழ்வின் இறுதிநாளான திங்கட்கிழமையன்று காலையில் அவர்கள் நோய் சற்று தளர்ந்ததாகத் தென்பட்டது. ஆனால் நேரம் செல்லச் செல்ல அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அடிக்கடி மூர்ச்சையானார்கள்.

முதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு part-07

ஹிராக்ளியஸ்

அரேபியாவில் உள்ள கிறிஸ்தவர்களின் துணையுடன் ஹிராக்ளியஸ் மதீனாவின் மீது படையெடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றான் என்ற செய்தி இறைத்தூதர் (ஸல்) அவர்களை அடைந்த பொழுது, தற்காப்புக்காக போர் செய்ய வேண்டிய சூழ்நிலைக்கு முஸ்லிம்கள் தள்ளப்பட்டார்கள். இப்பொழுது, மிகப் பெரிய வல்லரசை எதிர்த்துப் போர் புரியத் தயாராகிக்

முதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு part-06

கைபர் யுத்தம், முஹர்ரம் 7

ஹதைபிய்யாஉடன்படிக்கைக்குப் பின்பு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு மாத கால அளவு தான் தங்கியிருந்திப்பார்கள். பின்பு அவர்கள் கைபரை நோக்கிப் படை எடுத்தார்கள். இந்த கைபர் பகுதியில் அதிமான யூதக் குலங்களும், அவர்களைச் சார்ந்தவர்களின் கோட்டைகளும் அதிகமாக

முதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு part-05

அகழ் யுத்தம் - ஷவ்வால் 5

முஸ்லிம்களை அழித்தொழித்தொழித்து விடலாம் என்று குறைஷிகள் கண்ட கனவு பத்ருப் போரிலும், உஹதுப் போரிலும் கானல் நீராகிப் போனாலும், குறைஷிகளை அடுத்து இன்னுமொரு எதிரிக்கு இப்பொழுது முஸ்லிம்கள் முகம் கொடுக்க வேண்டியதிருந்தது. மதீனாவைச் சுற்றிலும் வாழ்ந்து

முதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு part-04

பத்ர் யுத்தம் ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு

பதர் யுத்தம் நடைபெறுவதற்கு முன் இருந்த சூழ்நிலைகளை நாம் ஆராய்ந்து பார்த்தோமானால், இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அவர்களது அருமைத் தோழர்களும் மக்கத்துக் குறைஷிகள் தந்த சொல்லொண்ணா வன்கொடுமைகளைச் சகித்தும், பொறுமையுடன் தங்களது இறைநம்பிக்கையைப் பாதுகாத்து வந்தார்கள். ஒரு கட்டத்தில் இறைநிராகரிப்பாளர்களின் கொடுமைகள் எல்லை மீறிச் சென்று

முதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு part-03

தந்தையின் மனக்குமுறல்

அபுபக்கர் (ரலி) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்று விட்டதை அறிந்த அவரது தந்தையாரான அபூ குஹஃபா அவர்கள் மிகவும் கவலையுற்றார்கள், விசனப்பட்டார்கள். தகவலறிந்தவுடன் நேராக தனது பேத்தியான அஸ்மா (ரலி) அவர்களிடம் வந்து, அஸ்மாவே..! உனது தந்தையார் மக்காவை விட்டு மதீனாவிற்குச் சென்று விட்டதாக அறிகின்றேன்..! இன்னும் இருந்த பணத்தையும் தன்னுடன் எடுத்து விட்டாரோ..? என்று வினவுகின்றார்.

முதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு part -02

அபீசீனியாவிற்குப் பயணமாகுதல் (ஹிஜ்ரத்)

இறைநிராகரிப்பாளர்களின் கொடுமைகள் மிதமிஞ்சிச் சென்று கொண்டிருந்த பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களை மக்காவை விட்டு அபீசினியாவிற்குப் பயணமாகும்படி அறிவுறுத்தினார்கள். அந்த காலகட்டத்தில் அபீசீனியாவை ஆண்ட கிறிஸ்தவ மன்னர் நீதிக்கும் இரக்கத்திற்கும் இன்னும் அங்கு அடைக்கலம் தேடிச் செல்வோர்களின் மீது கருணை காட்டக் கூடியவராக இருந்தார். இந்த தருணத்தில் முஸ்லிம்கள் இரண்டு பிரிவாக அபீசீனியாவிற்குப் பயணமானார்கள்.

முதல் கலீஃபா அபுபக்கர் (ரலி) வாழ்க்கை வரலாறு part -01



இஸ்லாத்திற்கு முன்பு..!

இஸ்லாத்திற்கு முந்தைய நாட்களில் அபுபக்கர் (ரலி) அவர்களின் இயற் பெயராக அப்துல் கஃபா என்ற பெயர் இஸ்லாத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டதன் பின் மாற்றம் செய்யப்பட்டு அப்துல்லா என்றழைக்கப்பட்டார். ஆனால் இன்றைக்கு இஸ்லாத்தின் ஆரம்ப நாட்களிலும் சரி அதன் பின்னாளிலும் சரி அவரது இயற் பெயர் மறைந்து அபுபக்கர் சித்தீக் என்றழைக்கப்பட்டார்கள். அபுபக்கர் என்பது அவரது பரம்பரைப் பெயராகவும்