Saturday, March 24, 2012

அகீகாவின் சட்டங்கள் பகுதி- 02

ஆடுதான் அறுக்க வேண்டுமா ?
நபி(ஸல்) அவர்கள் “யார் தன்னுடைய குழந்தைக்காக அறுத்துப் பலியிட விரும்புகின்றாறோ அவர் அறுத்துப் பலியிடட்டும், ஆண் குழந்தையாயின் இரண்டு ஆடுகளும், பெண் குழந்தையாயின் ஒரு ஆடும் கொடுக்கட்டும் எனக் கூறினார்கள்”
(ஆதாரம் : அபூ தாவுத் 2842, நஸாயீ 188, அஹ்மத்182,183;)



ஆனால் இன்று ஓர் சில போலி உலமாக்கள் ஆடு கிடைக்கா விட்டால் ஏனைய பிராணிகளான மாடு, ஒட்டகம் அறுக்க முடியும் எனக் கூறுகின்றார்கள். அதற்கு எந்த ஸஹீஹான அல்லது பலவீனமான ஆதாரம் கூடக்கிடையாது. எதனை வைத்து ஆதாரதம் காட்டுகின்றார்கள் என்பதும் நமக்குத் தெறியாது.
எனவே ஆடுதான் அறுத்துக் கொடுக்க வேண்டும்.

எத்தனை வயது கொண்ட ஆடாக இருக்க வேண்டும் ?
ஆட்டினுடைய வயது குறிப்பிடப்பட வில்லை ஆனால் ஆயிஷா (ரலி) அவர்களின் செய்தியில் இரண்டு வயதைத் தாண்டிய ஆடாக இருக்க வேண்டும் என்ற செய்தி பலவீனமானது. நாம் மேலே ஆயிஷா (ரலி) அவர்களின் பலவீனமான ஹதீஸ் ஒன்றைப்பார்த்தோம். அத் தொடரிலேயே இச் செய்தி இடம் பெறுகின்றமையால் இரண்டு வயதைத் கடந்திருக்க வேண்டும் என்கின்ற நிபந்தனை உள்ளடங்காது.

ஆனால் ஆண் குழந்தைக்காக அறுக்கப்படும் ஆடு ஒரே சமனிலையைய் கொண்டதாக காணப்பட வேண்டும். நபி(ஸல்) “ ஆண் குழந்தைக்கு இரண்டு சமனான ஆடுகளும், பெண் குழந்தைக்கு ஒரு ஆடும்” எனக் கூறினார்கள்.
(ஆதாரம் : அபூ தாவுத் 2836, திர்மிதி 1 / 286, அஹ்மத் 6 / 31 ، 158 )

அகீகாவை எப்படிக் கொடுப்பது ?
நாம் அறுக்கும் ஆட்டை சமைத்தோ அல்லது இறைசியை மட்டுமோ கொடுக்கலாம.; இதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் கிடையாது.

நாம் சாப்பிடலாமா ?
நாம் சாப்பிடுவதில் எந்த தடையும் இல்லை. இந்த விடயத்தில் இஸ்லாம் ஏழைகளுக்கு மட்டும் தான் வினியோகிக்க வேண்டும் என்று எந்த கட்டலையையும் இட வில்லை. அறுக்கும் ஆட்டின் எலும்பை உடைக்கலாம, அதனுடைய தோலை பதணிடலாம். இவற்றுக்கு எந்தத் தடையும் இல்லை.

முழுமையாக அறுக்கப்பட்ட ஆட்டை வேண்டலாமா ?
நபி (ஸல்) அவர்கள் “யார் தன்னுடைய குழந்தைக்காக அறுத்துப் பலியிட விரும்புகின்றாறோ அவர் அறுத்துப் பலியிடட்டும், ஆண் குழந்தையாயின் இரண்டு ஆடுகளும், பெண் குழந்தையாயின் ஒரு ஆடும் கொடுக்கட்டும் எனக் கூறினார்கள்”
(ஆதாரம் : அபூ தாவுத் 2842, நஸாயீ 188, அஹ்மத்182,183)

இந்த ஹதீஸில, அவர் அறுத்துப் பலியிடட்டும் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. எனவே யார் அகீகா கொடுக்க விறும்புகின்றாறோ அவர் அல்லது அவருடைய உரவினர்களோ தான் அறுக்க வேண்டும்.
முழுமையாக அறுக்கப்பட்ட ஆட்டை விலைக்கு வாங்க முடியாது.

ஆட்டினுடைய பெறுமதியை கொடுக்கலாமா?
நபி (ஸல்) அவர்கள் “யார் தன்னுடைய குழந்தைக்காக அறுத்துப் பலியிட விரும்புகின்றாறோ அவர் அறுத்துப் பலியிடட்டும், ஆண் குழந்தையாயின் இரண்டு ஆடுகளும், பெண் குழந்தையாயின் ஒரு ஆடும் கொடுக்கட்டும் எனக் கூறினார்கள்”
(ஆதாரம் : அபூ தாவுத் 2842, நஸாயீ 188, அஹ்மத்182,183;)

இந்த ஹதீஸிலும் அகீகா பற்றி பேசுகின்ற அனைத்து ஹதீஸ்களிலும் ஆட்டைத்தான் கொடுக்க வேண்டும் என வந்துள்ளது. எனவே ஆட்டினுடைய பெறுமதியைக் கொடுக்க முடியாது.

குழந்தையின் தந்தை மரணித்து விட்டால் யார் மீது கடமை ?
இக் கேள்வியினுள் தந்தை இருந்தும் முடியாவிட்டால் என்கின்ற கேள்வியும் ங}ழையும். “நபி (ஸல்) அவர்கள் ஹஸன் மற்றும் ஹீஸைன் அகிய இருவருக்கும் அகீகா கொடுத்தார்கள்”

(ஆதாரம் : நஸாயீ 2 \ 188, அஹ்மத் 5 \ 355இ316, தபரானீ 2 \ 121 )

இந்த ஹதீஸின் தந்தை இருந்தும் அல்லது இல்லாவிட்டாலும் மற்றவர்கள் கொடுக்கலாம் என்பதனைச் சொல்கின்றது.

தனக்குத் தனே அகீகா கொடுக்கலாமா ?
அதாவது தன்னுடைய தந்தை அல்லது உரவிணர்களால் தனக்கு அகீகா கொடுக்கப்படவில்லை என்றால் தனக்குத் தானே கொடுக்கலாமா ? என்பதுதான் இக் கேள்வி. “நபி (ஸல்) அவர்கள் நபித்துவத்தின் பின் தங்களுக்கு அகீகா கொடுத்தார்கள்.”
(ஆதாரம் : ஸனனல் அல் குப்ரா 19750)

இந்த ஹதீஸை வைத்துத்தான் தற்போது தனக்குத் தானே அகீகா கொடுக்கலாம, என பத்வா கொடுக்கின்றார்கள்.
ஆனால் இந்த ஹதீஸினுடைய தரத்தைப் பார்க் மறந்து விட்டார்கள். இந்த ஹதீஸிர்க்கு ஹதீஸ் கலை இமாம்கள் பலவீனமான ஹதீஸ் என விளக்கமளித்துள்ளார்கள். அதாவது இந்த ஹதீஸில் “முஹர்ரர்” என்பவர் இடம் பெறுகின்றார்.
இவர் பலவீனமானவர் என்பதில் இமாம்கள் அனைவரும் உடண்படுகின்றார்கள்.
எனவே ஒருவர் தனக்குத் தனே அகீகா கொடுக்க முடியாது என்பது தெளிவாகின்றது.

குழந்தையின் ஏழாவது வயதில் தந்தை ஊரில் இல்லாவிட்டால் ?
அகீகா சட்டமானது தந்தையுடன் சம்மந்தப்பட்டதல்ல எனவே தந்தை உயிருடன் இல்லாத போது எப்படி அறுக்கப்படுமோ அதே சட்டந்தான் இதற்கும் வாரும்.

இரட்டை குழந்தை பிறந்தால் ?
இரட்டை குழந்தை பிறந்தால் எப்படி ஆடு கொடுப்பது என்பதுதான் இக்கேள்வி. இரண்டு பேருக்கும் சேர்த்து இரண்டு ஆடு கொடுத்தால் போதுமா ? என்பன பேன்ற கேள்விகளும் உள்ளடங்கும்.

நபி(ஸல்) அவர்கள் “ ஹஸன்,ஹஸைன் ஆகிய இருவருக்கும் ஒரே அளவுள்ள சமனானா இரட்டிரண்டு ஆடுகள் கொடுத்தார்ள்
(ஆதாரம் : ஹாகிம் 4\237 )

இந்த ஹதீஸின் அடிப்படையில் இரட்டைக் குழந்தை பிறந்தால் இருவருக்கும் சேர்த்து நான்கு ஆடுகள் கொடுத்தல் வேண்டும், என ஒர் சிலர் பத்வா கொடுத்து வருகின்றார்கள்.
ஆனால் இந்த ஹதீஸை அவதானிக்க மறந்து விடுகின்றார்கள்.
நபி(ஸல்) அவர்கள் “நபி (ஸல்) அவர்கள் ஹஸன் மற்றும் ஹீஸைன் அகிய இருவருக்கும் ஒவ்வொரு ஆடு அகீகா கொடுத்தார்கள்”

(ஆதாரம் : அபூ தாவுத் 2841, பய்ஹகீ 9\299,302 )

இப்பொழுது மேலோட்டமாக பார்க்கின்ற போது இரண்டு ஹதீஸ்களும் முரண்படுவது போன்று தென்படும். ஆனால் உண்மை நிலை என்ன வென்றால், ஆரம்பத்தில் சொன்ன ஹதீஸானது அதாவது இரண்டிரண்டு ஆடுகள் அகீகாவாக கொடுத்தார்கள் என்று வருகின்ற ஹதீஸில் “சவார் அபூ ஹம்ஸா” என்பவர் வருகின்றார். இவரை ஹதீஸ்கலை இமாம்கள் பலவீனமானவர் என்று கூறிப்பிடுகின்றார்கள்.

இரண்டிரண்டு என்ற தொடரில் வருகின்ற அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானதாகும். அதே போன்று ஹஸன்(ரலி) அவர்களுக்கு மட்டும் ஒரு ஆடு கொடுத்தார்கள் என்று வருகின்ற ஹதீஸ்களும் பலவீனமானதாகும்.
இரண்டு ஆண் குழந்தைகள் ஒரேயடியாகப் பிறந்தால் நபி (ஸல்) அவர்களின் செயலுக்கு ஏற்ப இருவருக்கும் இரண்டு ஆடுகள் கொடுத்தால் போதுமானதாகும்.

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பிறந்தால் ?
மூன்று ஆடுகள் கொடுக்க வேண்டும். மேற் சொன்ன சட்டம, இரண்டு ஆண் குழந்தைகள் ஒன்றாகப் பிறந்தால், அவர்களுக்குறிய தனிச் சட்டமாகும்.

குறிப்பு : எமது இந்த ஆய்வில் அகீகாவின் சட்டங்கள் மட்டும்தான் கொடுக்கப்பட்டுள்ளது. தலை முடி வெட்டுதல், பெயர் சூட்டுதல், ஹத்னா செய்தல் என்பன தனித் தனியாக ஆய்வு செய்யப்படுகின்றன. எமது ஆய்வின் இருதியில் குழந்தையின் ஏழாம் வயதில் என்ன செய்ய வேண்டும் என்கின்ற ஆய்வென்றும் சுருக்கமாக வெளியிடப்படும்.

7 comments:

  1. யார் தன்னுடைய குழந்தைக்காக அறுத்துப் பலியிட விரும்புகின்றாறோ /// ??? விருப்பம் இல்லை.. அல்லது வசதி இல்லை என்றால்???

    ReplyDelete
    Replies
    1. அவர் மீது குற்றம் கிடையாது இதனை இறைவன் திருமறையில் அழகான முறையில் ' அள்ளாஹ் எந்தவொரு ஆத்மாவையும் தனது சக்திக்கு அப்பால் கட்டாயப் படுத்துவது கிடையாது' என சொல்லிக் காட்டுகின்றான்.

      Delete
  2. இரட்டை குழந்தை, இரண்டும் பெண் குழந்தைகள் எனின் எவ்வாறு அகீகா கொடுக்க வேண்டும்?

    ReplyDelete
  3. ஹதீஸின் அடிப்படையில் பார்போமானால் இருவருக்கும் சேர்த்து இரண்டு ஆடுகள் கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
  4. ஆண் குழந்தைக்கு 2 ஆடுகளை தனிதனி யாக இடைவெளிவிட்டு அறுக்கலாமா

    ReplyDelete
  5. அகீகா ஆறு வைது இருகும் போது குடுக்கலாமா

    ReplyDelete
  6. நேர்ந்து வைத்ததை அந்த குடும்பமே சாப்பைடலாமா?

    ReplyDelete