இன்று எங்களுக்கு மத்தியில் இஸ்லாம் என்றால் மார்க்கம் எனும் கண்னேட்டத்தில் பார்க்காமல் மதமாகவே பார்க்கின்றோம். இதனால் இஸ்லாம் என்றால் என்ன என்று கூடத் தெறியாமல் இஸ்லாமிய சமூதாயம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. அத்துடண் முடிவடையாமல் அண்ணிய சகோதர்கள் மூலம் இஸ்லாம் என்பது வெறுமினே வெறித்தணத்தையும், பயங்கரவாதத்தையும், குறோதங்களையும் வளக்கும் ஒரு மார்க்கமாக சித்தறிக்கப் படுகின்றது. இதனாலேதான் இஸ்லாம் கொச்சயாகப் பார்க்கப்பட்டாலும், அதனுடைய வளர்சியை யாராலும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது.
இஸ்லாம் என்பது இறைவனின் நேர்வழியாகும், அவனை வணங்குவதன் மூலம் இஸ்லாத்தை கண்ணியப் படுத்துகின்றோம். அதனை பரப்புவதற்காகவும், தெழிவு படுத்துவதற்காகவும் பல தூதர்களும், வேதங்களும் அருளப்பட்டன. ஓவ்வெரு தூதர்களும் அனுப்பப்படும் போதும், அவர்களுக்கு முன் சென்றவர்கள் விட்டுச் சென்றதை பின் வருபவர்கள் தொடர்ந்து செய்வார்கள். இப்பணியானது மனித சமூதாயம் தனது வளர்ச்யை (நாகரீகத்துக்கும் அணாகரீகத்துக்கும் இடையில் வித்தியாசத்தை) காணும்வரை தொடர்ந்தது. இறுதியில் இப்பயணமானது கடைசி இறைத் தூதர் நபி(ஸல்) அவர்களுடன் முடிவுக்கு வந்தது.
மனித சமூகமானது இறைவனின் கட்டளைகளைக் கண்டு பின்வாங்கி, இக்கட்டளைகள் எங்களை பாதாளத்தில் தள்ளிவிடும் என்று அஞ்சி, தங்களைத் தாங்களே பாதாளத்தில் தள்ளிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இஸ்லாமோ! மனித சமூம் வாழ்வதெற்க்கு தேவையான அனைத்தையும் சொல்லிவிட்டது. மனிதர்கள் சொல்கின்ற உலகமயமாக்கல் என்பதை எப்பவோ சொல்லிவிட்ட இஸ்லாம், அதன் போது எப்படி வாள வேண்டும் என்பதையும் சொல்லிவிட்டது. ஆனால் மனிதனோ உடலையும், உள்ளத்தையும் வருத்திக் கொண்டு, உலகமயமாக்களில் நாங்கள் வாழ்கின்றோம் என்று போலியாக மார்தட்டிக் புகழ் பாடிக் கொள்கின்றார்கள்.
அன்பு, கருணை, சந்தோசம் என்பதன் யாதார்த்தமே புரியாத ஜடங்களாகவும், மனித இயந்திரங்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்றார்கள். இவற்றுக்கு கௌ;ளாம் மரணடியாக, இஸ்லாம் தனது அடிச்சுவடுகளை காண்பித்து, அதன் பால் அழைக்கின்றது. இதனையே இறைவன் தனது திருமறையில் “நிச்சயமாக இந்தக் குர்ஆன் மிக நேரானதின்பாலே வழிகாட்டுகின்றது” (17:9) அதே போன்று இன்னும் இறைவன் கூறுகையில் “ இதனை (குர்ஆனை) உண்மையைக் கொண்டே இறக்கி வைத்தோம். மேலும், உண்மையைக் கொண்டே அது இறங்கியது.”(17:105) இறைவன் மனிதனுக்கு தேவையான அனைத்தையும் பூர்த்தியாகி விட்டதாகவும் அதனை நோக்கி செல்லுமாறும் கட்டளையிடுகின்றான்.
“இன்றைய தினம் உங்களது மார்க்கத்தை உங்களுக்கு நான் முழுமைப்படுத்தி விட்டேன,; எனது அருட்கொடையையும் உங்கள் மீது பூரணப்படுத்தி விட்டேன். மேலும் நான் இஸ்லாத்தையே உங்களுக்கு மார்க்கமாக பொருந்திக் கொண்டேன்”.என்று அல்லாஹ் கூறுகின்றான். (5:3). மேலே சொல்லப்பட்ட மூன்று வசனங்களும் மனிதனுக்கு தேவையான நான்கு அடிச்சுவடுகளைச் சொல்லிக் காட்டுகின்றது. அவைகள் “இறைக்கோட்பாடு, நற்பண்புகள், வியாபார நடவெடிக்கைகள், இப்பிரபஞ்சத்தில் மனிதன் அல்லது மனிதனுக்கு முன்னால் இவ்;பிரபஞ்சம்”. முதலாவது அடிச் சுவடான இறைக்கோட்பாடானது, மனிதனிடம் இறைவன் ஒருவன், அவனையே வணங்க வேண்டும் என்றும.; உதவி தேவைகள், கஷ்ட துன்பங்கள் அனைத்தையும் அவனிடம்; முறையிடுவதன் மூலம் மனிதன் தன்னைத் தனே அறிந்து கொள்கின்றான் என்று சொல்கின்றது.
இக்கோட்பாடு மனித உள்ளத்தில் காணப்படுமாயின், பாவங்கள் செய்வதிலும், செய்வதிலிருந்தும் மனிதன் விடுபட்டுவது, மாத்திரமல்லாமல் இரகசியமாகவோ பரகசியமாகவோ எத்தீன்மையின் பாலும் நெருங்க மாட்டான். இப்படி மனிதன் மாறுவதோடு நிண்டுவிடாமல் இவ்வுலகமும் அமைதியின் பக்கம் செல்வதற்கும் உந்து சக்தியாக மாறுகின்றான். இக்கோட்பாடு மனிதனின் உள்ளத்தில் வேருண்டுமாயின் அம்மனிதன் பூரணமிக்கவனாக காணப்படுவான்.
நட்பண்புகள் எனும் இரண்டாவது அடிச்சுவடானது மனிதநேய ப+ர்த்தியை வேண்டி நிர்கின்றது. செயலில் உருதியையும், சொல்லில் வாய்மையையும், வாக்கை நிறைவேற்றுவதில் நேர்மையையும், பரஸ்பரம், அன்பு, பொறுமை, உறுதி, விடா முயற்சி போன்ற வெற்றை எடுத்துக் காட்டுகின்றது. பொறாமை, நயவஞ்சகம், குறோதம், பொய், ஏமாற்று, மோசடி போன்ற தீயபழக்கங்களில் இருந்து மனிதனை தூய்மைப் படுத்தி மனித நேயத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வருகின்றது. இவ்வடிச் சுவடுகள் மனிதனிடம் காணப்படுமாயின் மனிதன் தன்னைத்தானே சீர்செய்வதுடன் வெளியுலகத்தையும் சீர்செய்கின்றான். இதனையே நபி(ஸல்) அவர்கள் அழகாக சொல்லிக் காட்டினார்கள் “நீங்கள் அறியவேண்டாமா! உடலில் ஒரு சதைப்பிண்டம் உள்ளது, அது சீர் பெற்று விட்டால் உடலனைத்தும் சீர் பெற்று விடும். அது கெட்டுவிட்டால் உடலனைத்தும் கெட்டு விடும். அது தான் உள்ளம்” அறிவிப்பாளர் அன்ங}க்மான் பின் பஸீர்(ரழி), ஆதாரம்: புஹாரி ( 2573) முஸ்லிம் : (1599).
மூன்றாவது அடிச்சுவடானதுதான் மனிதன் உயிர்வாழ வேண்டும் என நிணைக்கும் வியாபாரத்தையும் அதனைச்சார்ந்த விடயங்களையும் சொல்லிக் காண்பிக்கின்றது. வியாபாரத்தின் அடிப்படையான நீதம், உண்மை என்பன இன்று மனிதர்களுக்கு மத்தியில் உயிரோடு புதைக்கப்பட்டு விட்டது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஆனால் இவ்வடிச் சுவடானது அதனை எப்படி மறுபடியும் உயிர்பிப்பது என்பதனை அழகாக காண்பிக்கின்றது. திருமறையில் அல்லாஹ் “அளவை, நிறுவையில் மோசடி செய்வர்களுக்கு கேடுதான்” (83:1) என்று சொற் சுருக்கமாக சொல்லிவிட்டான். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் “ வியாராம் செய்பவர்கள் ( வியாபாரி, ங}கர்வோர்) அவர்களின் இடங்களைவிட்டு செல்வதற்கு முன்னால் அவர்களின் பொருட்களில் அவர்களுக்கு தேர்வுண்டு. அவர்கள் உண்மை பேசி, பொருட்களின் ( குறை நிறையை) தெளிவு படுத்தினால், அவர்களின் பொருட்களில் (அல்லாஹ்வின்) அருள் பொளிந்து விட்;டான். (பொருட்களின் குறை நிறைகளை ) மறைத்து பொய் பேசுவார்களாயின் அப்பொருட்களின் அருள் (பரகத்) அளிக்கப்பட்டு விட்டது.” அறிவிப்பவர் ஹகீம் பின் ஹிஸாம்(ரழி), ஆதாரம்: புஹாரி (2082). இவ்வெச்சரிக்கையிலிருந்து விடுபட்டு, இஸ்லாம் அழைக்கும் தர்ம வியாபார அடிச் சுவட்டில் பயணிப்போமாக.
நான்காவது அடிச்சுவடான பிரபஞ்சத்தில் மனிதன். மனிதப்பிறவியின் நோக்கம் இப்பிரபஞ்சத்தில் இறைவனின் பிரதிநிதியாக வாழ்வதே. இறைவன் மனிதர்களைப் படைத்து அதில் உள்ள சூரிய சந்திரன், இரவு பகல், கடல் நதி, மிருக பறவைகள் போன்ற அனைத்தையும் அவனுக்கு வசப்படுத்திக் கொடுத்து, ஆட்சி புரிவதற்கான அனைத்து ஆற்றலையும் கொடுத்தான். இதனையே இறைவன் “அவன்தான் பூமியலுள்ள அiதை;தையும் உங்களுக்காக படைத்தான்” அல்பகரா(29). அவற்றை பாராமறிப்பதற்கான அறிவையும் கொடுத்தான். ஆனால் மனிதனோ அதில் கொடுங்கோல் ஆட்சி புரிய வேண்டும் என்று பேராசை கொண்டு, அதிலுள்ள அனைத்தையும் நவீனத்தின் வளர்ச்சி எனும் பெயரில் அழிக்க ஆரம்பித்து விட்டான். இதனாலேதான் மனிதன் இயற்;கையின் சீற்றத்தை சந்திக்க வேண்டியுள்ளது. திருமறையில் அல்லாஹ் “மனிதர்களின் கைகள் சம்பாதித்தவற்றின் காரணமாக தரையிலும் கடலிலும் குழப்பம் தோன்றிவிட்டது” எனக் கூறிக்காட்டுகின்றான். (30:41).
இஸ்லாம் மனிதர்களை இவ்வடிச்சுவட்டை தான்றோனித் தணமாக செய்யாமல் அதன் அடிப்படையில் செய்வாற்கு அழைக்கின்றது. ஆனால் மனிதன் விடாப்பிடியாக ஒற்றைக் காலில் நின்று இச்சுவடுகளை புறமுதுகுக்குப் பின்னால் வைத்துவிட்டான். அத்தோடு தன்னுடைய தாண்டவத்ததை நிறுத்திவிடாமல் அச்சுவடுகளை குழிதோண்டி உயிரோடு புதைத்து விட்டான். அவை அனைத்தும் மீண்டும் விஸ்வரூபம் எடுத்து நச்சுப்பாம்பு போன்று படமெடுத்து மனிதனைக் காவு கொள்ள காத்திருக்கின்றது.
அவையனைத்தையும் முறியடிக்க வேண்டுமாயின் மனிதன் இஸ்லாம் அழைக்கும் அடிச்சுவட்டை நோக்கி வீரு நடைபோட வேண்டும்.
இவ்வடிச்சுவடுகளை கொச்சைப் பார்வை பார்த்து தள்ளிவிடாமல் செவ்வனே செவி புலனேறாக பின்பற்றுவதற்கு அல்லாஹ் எம் அனைவருக்கும் அருள்புரிவானாக. அல்லாஹ் மிக அறிந்தவன்.
0 comments:
Post a Comment