Saturday, March 7, 2015

இஸ்லாத்தின் பார்வையில் துருவித் துருவி ஆராய்தல்

இஸ்லாத்தின் பார்வையில் துருவித் துருவி ஆராய்தல்

இன்று இஸ்லாமிய சமூகத்துக்கு மத்தியில் பரவி இருக்கின்ற மிகக் கொடிய நோய்களில் ஒன்றுதான் மற்றவர்களின் குறைகளை தேடிக் கண்டு பிடித்து திரைக்கு கொண்டு வருவது. மற்றவர்களின் மாமிசத்தை பச்சையாக ருசிப்பதில் எமது சமூகத்தினர் முன்னிடம் வகிக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக இளம் பருவத்தினர் அதி கூடுதலாக ஈடுபடுகின்றார்கள். இவற்றுக் கெல்லாம் அடிப்படைக் காரணம் எம்முடய சமூகத்துக்கு மத்தியில் காணப்படுகின்ற அறியாமையே.



நவீனத்தில் வளர்சியடைந்த நாங்கள, இஸ்லாதின் அடிப்படையை தெறியாததுதான் கேள்வி குறியாக காணப்படுகின்றது, நாகரீகத்தின் தோற்றம் நாங்கள் என மார்பு தட்டும் நாம், அநாகரீகத்தை அடையாளமா மாற்றி வருவதோடு காட்டு மிறாண்டிகளாகவும் உலா வருகின்றோம்.

இவ்வுலகத்துக்கு நற்பண்புகளை காண்பித்த நாம், நாகரீகம் என்றால் என்ன என்று சொல்லிக் கொடுத்த நாம், அவை அனைத்தையும் மறந்து, அண்ணியர்களிடம் கைகட்டி தலை குணிந்து அனைத்தையும் பாடமா பகில்கின்றோம். அதற்கும் மேலாக நாம் நம்முடைய மார்க்கமான இஸ்லாத்தை மறந்து காற்றில் அகப்பட்ட துறும்பு போன்று அங்குமிங்கும் அடிபட்டு அல்லல் பட்டு காணப்படுகின்றோம்.

நபி (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்ட காரணங்களில் மிக முக்கியமாக காணப்படுவதுதான் நற்பண்புகளை பூரணப்படுத்துதல், அபூ ஹ{ரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள், நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் “ நற்பண்புகளை பூரணப்படுத்துவதற்காகவே நான் அனுப்பபட்டேன்” ஆதாரம் : பைஹகி (20572) ஆனால் நம்மிடம் நற்பண்புகள் எவை எனக்கேட்டகப் பட்டால் தலை குணிந்து மௌனியா நிற்க்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்படுட்டுள்ளோம், குறைகளை மறைப்பது என்பது நற்பண்புகளில் ஒன்றா என்று வியப்பாக கேள்வி கேட்டு, அதற்கு விடையளிகின்றோம் என்று குறைகளை அம்பலப்படுத்துவதுதான் நட்பண்பாகும் என முஸ்லீம்கள் என்னும் போர்வையை அணிந்து கொண்டிருப்பவர்கள,பல மேடைகள் போட்டு வாதாடி வருகின்றார்கள்        (அல்லாஹ் அவர்களுக்கு நேர் வழி காட்ட வேண்டும்).

அல்லாஹ் திருமறையில் “ ஈமான் கொண்டவர்களே! ( சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள.; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்கள் சில பாவங்களாக இருக்கும் (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள்” (அல் ஹ{ஜறாத் : 12). இமாம் தபரி அவர்கள் இந்த வசனத்துக்கு விரிவுரை வளங்கும் போது “ “பிறருடைய குறைகள்” எனப்படுவது அவர்களின் அந்தரங்க இரகசியங்களும் அவர்களின் கண்ணியமுமாகும்” எனக் குறிப்பிடுகின்றார்கள்.
இமாம் இப்னு கதீர் அவர்கள் இந்த வசனத்திர்கு விரிவுறை வளங்கும் போது “ துருவித் துருவி ஆராய்வது என்பது அதிகமாக கெட்ட விடயங்களில் தான் காணப்படும்” என விளக்கமளிக்கின்றார்கள். இமாம் குர்துபி அவர்கள் இந்த வசனத்துக்கு விளக்கமளிக்கும் போது “வெளிப்படையாக தெரிகின்ற வெற்றை எடுத்துக் கொள்ளுங்கள் ஆனால் உங்களுடைய சகோதரனின் குறைகளை வெளியில் தெறியாமால் இறைவன் மறைத்த பிறகு அதனை வெளிக் கொண்டுவரும் நோக்கில் ஆராய வேண்டாம்” எனக் குறிப்பிடுகின்றார்கள்.  “ (ஆதாரமில்லாமல் பிறரை) சந்தேகப்படுவதை உங்களுக்கு எச்சரிக்கிறேன். ஏனெனில், சந்தேகம் கொள்வது பெரும் பொய்யாகும்.( பிறரின் குறையைத்) துருவித் துருவி ஆராயாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்கவைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். ஒருவருக்கொருவர் பொறாமை கொள்ளாதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள்.(மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.” என நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள்.அறிவிப்பவர் : அபூஹ{றைரா(ரழி), ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்.

நபி(ஸல்) அவர்களின் இவ்வெச்சரிக்கையானது அதாவது சந்தேப்படுவதென்பதின் மூலம் நாடப்படுவது, ஒருவர் மீது எக்காரணமும்மில்லாமல் குற்றம் சுமத்துவதாகும். அதனை உருதிப்படுத்துவதற்காக அவரின் அந்தரங்களை துருவித் துருவி ஆராய்து இதனைத்தான் நபி(ஸல்) அவர்கள் “ துருவித் துருவி ஆராயாதீர்கள்” எனத் தடைவிதித்தார்கள். இதனையே அல்லாஹ் அழகான முறையில் குர்ஆனில் சொல்லிக் காட்டுகின்றான். “ துருவித் துருவி ஆராயாதீர்கள், உங்களில் சிலர் சிலரைப் பற்றி புறம் பேசாதீர்கள்” இவ்வசனமானது இன்னுமொன்றை எங்களுக்கு உணர்த்துகின்றது, ஒரு முஸ்லிம் சகோதரனின் மாணத்தை எந்தளவுக்கு எச்சந்தேகமும் இன்றி எங்களால் காக்க மூடியுமோ அந்தளவுக்கு காக்க வேண்டும் என எங்களுக்கு கட்டளையிடுகின்றது.
ஒருவன் நான் உருதிப்படுத்துவதற்காகவே தேடுகின்றேன் எனக் கூறினால் “துருவித் துருவி ஆராயாதீர்கள்” என இறைவன் கூறுகின்றான் எனச் சொல்லப்படும். துருவித் துருவி ஆராயாமல் உருதிப்படுத்த போகிறேன் என்று கூறுவானால் “உங்களில் ஒருவர் மற்றவரை புறம் பேசா வேண்டாம்” என இறைவன் கூறுகின்றான். எவ்வகையில் பார்தாலும் ஒருவரை மாணவங்க படுத்த முடியாது.

“நபி(ஸல்) அவர்களிடம் மாயிஸ் இப்னு மாலிக் அவர்கள் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் விபசாரம் செய்துவிட்டேன் எனக் கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், நீ அவளை முத்தமிட்;டிருக்கலாம் அல்லது கை விரலால் தொட்டிருக்கலாம் அல்லது அவளை பார்திருக்கலாம் எனக் கூறினார்கள். அதற்கு மாயிஸ் (ரழி) அவர்கள் இல்லை நான் விபசாரம் செய்தேன் எனக் கூறினார்கள். அதன் பிறகு அவருக்கு கல்லெறிந்து தண்டனை நிறைவேற்றப்பட்டது” என இப்னு அப்பாஸ்; (ரழி) அறிவித்தார்கள். ஆதாரம் : புஹாரி (6824)

இவ்வரலாற்று சம்பவத்தில் நபி(ஸல்) அவர்களோ அல்லது ஸஹாபாக்களோ மாயிஸ் (ரழி) இடம் நீ எப்பொண்ணுடன் விபசாரம் செய்தாய் என கேட்கவுமில்லை அதனை துருவித் துருவி ஆராயவும் இல்லை. இவ்வாரான ஒரு சம்பவம் எம் மத்தியில் நடை பெற்றால், எம் சாமூகத்தின் நிலை என்னவாக காணப்படும் என்பது நாம் அறிந்த விடயமே. எமது கற்பனைக்கு அப்பாற்பட்டதுமல்ல.
   
“நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்து, அல்லாஹ்வுடைய தூதரே! நான் தண்டனை நிரைவேற்றப்பட வேண்டிய பெண்ணாகிவிட்டேன், என்னை தூய்மைப் படுத்துங்கள் என்றால். நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பாவமண்ணிப்பு தேடிக் கொள் என்றார்கள், உடனே அப்பெண், அல்லாஹ்வுடைய தூதரே! எனது வயிற்றில் விபசாரத்தின் மூலம் சிசு உண்டாகியுள்ளது எனக் கூறினால். நபி (ஸல்) அவர்கள் குழந்தை பெற்றவுடண் வா என்று சொல்லி அனுப்பினார்கள். மீண்டும் அப்பொண் குழந்தையுடன் வந்தபோது குழந்தைக்கு பால்குடி மறந்த பின் வா எனத்திருப்பி அனுப்பினார்கள், குழந்தை பால் குடி மறந்த பின் மீண்டும் அப் பொண் வந்தால். அதன் பின்னர் தண்டனை நிறைவேற்றப் பட்டது.” ஆதாரம்: முஸ்லிம் (1695).

இப்பெண்னிடம் எத்தவொரு ஸஹாபிப் பொண்களோ அல்லது ஸஹாபாக்களே நீ யாருடன் விபசாரம் செய்தாய் எனக் கேட்கவுமில்லை, அதனை துருவித் துருவி ஆராயவுமில்லை. ஆனால் இப்படியான ஒரு சம்பவம் எம் சமூக்த்தின் மத்தியில் நடைபெற்றால். அப்பெண்ணை மத்திரமல்ல அப்பெண்ணின் குடும்பத்தாறையும் எம் சமூகம் விட்டு வைக்க மறவாது.

“யார் ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக திட்டமிட்டு சொன்னால், அவர் (மறுமையில்) இரண்டு வாற்கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றாக சேர்த்து) முடிச்சுப் போடும்படி நிர்ப்பந்திக்கப்படுவார்.ஆனால் அவரால் ஒருபோதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.) தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில் அல்லது தம்மை கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில் அவர்களின் உரையாடலைக் காது தாழ்த்தி (ஒட்டுக்) கேட்கிறவரின் காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும். (உயிரினத்தின்) உருவப் படத்ததை வரைகிறவர் அதற்கு உயிர் கொடுக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டு வேதனை செய்யப்படுவார். ஆனால் அவரால் உயிர் கொடுக்க முடியாது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், என இப்னு அப்பாஸ்(ரழி) அறிவித்தார்கள். ஆதாரம் புஹாரி (7042).

நபி(ஸல்) அவர்களின் இக் கூற்றானது எங்களுக்கு ஒருவறுடைய கூற்றை ஒட்டுக் கேட்பதை வண்மையாக கண்டிக்கின்றது. எனவேதான் இமாம் இப்னு ஹஜர் அவர்கள் “இதில் வந்துள்ள எச்சரிக்கையான காதில் ஈயத்தை ஊற்றுவது, ஒருவருடைய அந்தரங்கத்தை கோட்பதுக்கு ஒப்பானது” எனக் குறிப்பிடுகின்றார்கள்.

இப்படியான பாவங்களில் இருந்தும், அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து பாதுகாப்பு தேடுவோமாக. அல்லாஹ் மிக அறிந்தவன்.




0 comments:

Post a Comment