Wednesday, June 26, 2013

ரமழானின் முதல் பத்து, இரண்டாம் பத்து, இறுதிப் பத்து

இக் கட்டுரை http://islamintamil.forumakers.com/t934-topic இணைய தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைக்கான மறுப்பாகும்.


இறைவன் மனிதனுக்கு அளித்;த அருட்கொடைகளில் புனித ரமாழானும் ஒன்றாகும். ஆனால் இந்த மாதத்தை புனிதப்படுத்துகின்றோம் எனும் பெயரில் பல பலவீனமாக ஹதீஸ்களை மக்களுக்கு மத்தியில் பல உலமாக்கள் இன்னும் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அவ்வாறு சொல்லப் படுகின்ற ஹதீஸ்களில் மிக கவனிக்கப்பட வேண்டிய ஹதீஸ் இதுவாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ரமலானின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் 'ரஹ்மத்' எனும் அருட் கொடையாகவும் நடுப் பத்து நாட்கள் 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புக் குரியதாகவும் கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து 'நஜாத்' மீட்சியளிக்கக் கூடியதாகவும் உள்ளது. அல் ஹதீஸ் ஆதார நூல் இப்னு குஜைமா

இந்த ஹதீஸை பலர் மார்க்க உபண்யாசங்களில் சொல்வது மாத்திரமால்லாமல் இந்த ஹதீஸக்கு பலவிதமான விளக்கங்களையும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.
 இந்த ஹதீஸை ஏன் மக்களுக்கு சொல்லக் கூடாது?.

இந்த ஹதீஸ் “இப்னு ஹீஸைமாவீல”; மாத்திரமல்ல பல ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளன.

இந்த ஹதீஸில் “அலி இப்னு ஸைத் இப்னு ஜுத்ஆன்” என்பவர் இடம் பெறுகின்றார். இவறை பற்றி ஹதீஸ் கலை அறிஞ்சர்கள் கூறும் போது. இவர் யார் என்று அறியப்படாதவர் என்று சொல்கின்றார்கள்.

இன்னும் இந்த ஹதீஸை பலவீனமானது என்றும் சொல்கின்றார்கள்.

எனவே மக்களுக்கு மத்தியில் இப்படியான பலவீனமான ஹதீஸ்களை சொல்வதையும், பல விதமான விளக்கங்ளை சொல்வதையும் தவிர்துக் கொள்வோமாக.

0 comments:

Post a Comment