Thursday, January 24, 2013

வேற்றுக் கிரகத்தில் மனிதர்களா ?

வேற்றுக் கிரகத்தில் மனிதர்களா ?

'வேற்று கிரகவாசிகளை நெருங்கி விட்டோம' என்று அமானுள்ளாஹ் எம்.றிஸாத் அவர்கள்
(http://www.virakesari.lk/article/feature.php?vid=80)
வீரகேசரி பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரைக்கான இஸ்லாத்தின் அடிப்படையில் ஆதாரபூர்வமான மறுப்பு.

இன்று மக்கள் மத்தியில் பரவலாக வேற்றுக்கிரகத்தில் இருந்து மனிதர்களைப் போன்ற உயிரினங்கள் இவ்வுலகத்துக்கு வருகை தருகின்றார்கள் என்று பரவலாக வதந்திகள் பரவி வருவதைக் காண்கின்றோம். அதனை உண்மைப்படுத்தும் வகையில் ஆங்கிலத் திரைப் படங்களில்(ஹொலிவூட்) வேற்றுக்கிரக வாசிகள் மனிதர்களை விட சக்தி வாய்ந்தவர்கள் போன்று படப்பிடிப்புகளை ஒலி பரப்புகின்றார்கள். அத் திரைப் படங்களை சிறுவர்களின் உள்ளங்களிலும் ஆழப் பதிய வைக்கின்றார்கள். இதன் தாக்கத்தால் பெரியவர்களும் பாதிப்படைகின்றார்கள். அது மட்டுமல்லாமல் பத்திரிகைகளிலும்இ சஞ்சிகைகளிலும் 'பூமிக்கு வேற்றுக்கிரக வாசிகளின் வருகைஇ வேற்றுக்கிரக வாசிகளை சந்திக் முடியும்' என்பன போன்ற தலைப்புகளில் பல கட்டுரைகள் பிரசுரிக்கப்படுகின்றன.


ஆனால் இதனை இஸ்லாத்தின் அடிப்படையில் ஆராய்வோமானால் வேற்றுக்கிரகங்களில் உயிரினங்கள் வாழ்வதற்கான எந்த அடிப்படைக் காரணிகளையும் கண்டு கொள்ள முடியாது. இதனை அள்ளாஹ் பல வருடங்களுக்கு முன்னால் கூறிவிட்டான்.


அள்ளாஹ் ஆதம்(அலை) அவர்களைப் படைத்து பூமிக்கு அனுப்பும் போது உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும்இ வசதியும் உள்ளன. எனக் கூறினான்.

உதாரணமாக பூமிக்கு அருகில் அதன் துணைக் கோள் சந்திரன் உள்ளது. சூரியக் குடும்பத்தில் பூமியையும் சேர்த்து 9 கோள்கள் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியைத் தவிர வேறெந்தக் கேள்களிலும்இ பூமியின் துணைக் கோளான சந்திரனிலும் மனிதன் வாழ முடியாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.


மெர்குரி எனும் புதன் கோளை எடுத்துக் கொள்வோம் சூரியனிலிருந்து 58000000 கிமீ தொலைவில் உள்ளது. ஆனால் இதில் இரண்டு காரணங்களால் இங்கே மனிதன் வாழ முடியாது. முதலாவது காரணம் இக்கோளில் காற்றுக்கிடையாதுஇ அடுத்து இக்கோளில் அதிக பட்ச வெப்பமாகும். 480 டிகிரி சென்டிகிரேடும்இ குறைந்தபட்ச வெப்பம் 180 டிகிரி சென்டிகிரேடும் ஆகும். இது பூமியில் மனிதர்களால் தாங்கிக் கொள்ள முடியாத 40 டிகிரி வெப்பத்தை விட 12 மடங்கு அதிகம்.


அதே போன்று பூமியின் ஈர்ப்பு விசையைப் போன்று மூன்றில் ஒரு பங்கு ஈர்ப்பு விசையுள்ளது. மார்ஸ் எனப்படும் செவ்வாய் கிரகத்திலும் மனிதன் வாழ முடியாது. சூரியனிலிருந்து 23 கிமீ தொலைவிலுள்ள இக்கிரகத்தில் பூமியிலுள்ள காற்றில் நூறில் ஒரு பங்குதான் உள்ளது. அந்தக் காற்றிலும் ஒரு சதவிகிதம்தான் ஒட்சிசன் உள்ளது. இங்கு அதிக பட்ச வெப்பம் 87 டிகிரி சென்டிகிரேடும்இ குறைந்த பட்ச வெப்பம் 17 மைனஸ் டிகிரியும் காணப்படுகின்றது. இதனால் இங்கு மனிதனும் ஏனைய உயிரினங்களும் வாழ முடியாது.


வீனஸ் எனப்பபடும் வெள்ளிக் கோளை எடுத்துக் கொண்டால் சூரியனிலிருந்து 10இ08இ00இ000 கிமீ தூரத்தில் உள்ளது. இங்கே 457 டிகிரி சென்டிரேட் வெப்பம் நிலவுகின்றது. இக்கோள் பூமியைப் போல் 10 மடங்கு அதிக பட்ச வெப்பத்தைக் கொண்டுள்ளது. மேலும் உயிரினங்கள் வாழ்வதற்கான ஒட்சிசனும் இங்கு கிடையாது. அதே போன்று இக்கோள் கொத்க்கும் கோள் என்று அழைக்கப்படுகின்றது. இதனால் இங்கு மனிதனும் ஏனைய உயிரினங்களும் வாழ முடியாது.


ஜீபிடர் எனும் வியாழன் கோள் சூரியனிலிருந்து 78 கோடி கிமீ தூரத்தில் உள்ளது. இது பாறைக் கோளமாக இல்லாமல் வாயுக் கோளமாக உள்ளது. மேலும் இங்கு பூமியின் ஈர்ப்பு விசையை விட இரண்டரை மடங்கு அதிகம். இதனால் நமது எடை இரண்டரை மடங்கு அதிகமாகின்றது. நமது எடையை நாமே தாங்க முடியாது. இதனால் இங்கு மனிதனும் எனைய உயிரினங்களும் வாழ முடியாது.

சாட்டர்ன் எனும் சனிக் கிரகம் சூரியனிலிருந்து 142 கோடி கிமீ தூரத்தல் உள்ளது. இங்கு எரிபொருளும் உரைந்து போகும் அளவுக்கு 143 மைனஸ் டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உள்ளது.


யுரேனஸ் கிரகம் சூரியனிலிருந்து 178 கோடி கிமீ தூரத்திலும் நெப்டியூன் கிரகம் சூரியனிலிருந்து 450 கிமீ தூரத்திலும்இ புளுட்டோ கிரகம் 590 கிமீ தூரத்திலும் உள்ளதால் இந்தக் கிரகங்களில் கற்பனை செய்ய முடியாத கடுங் குளிர் நிலவுகின்றது இதனால் இங்கு மனிதனும் ஏனைய உயிரினங்களும் வாழ முடியாது.

பூமியின் துணைக் கோளான சந்திரனிலும் மனிதன் வாழ முடியாது. மனிதன் உயிர் வாழத் தேவையான தண்ணீர்இ காற்று எதுவும் இங்கு கிடையாது. பகல் வெப்பம் 127 டிகிரி சென்டிகிரேடும்இ இரவு வெப்பம் மைனஸ் 173 டிகிரி சென்டிகிரேடும் ஆகும்.

சில கோள்களில் உயிரினம் வாழ்ந்த தடயம் தென்படுகிறது என்றெல்லாம் கூறினாலும் அது நிரூபிக்கப்படவில்லை. மனிதன் பூமியில் மட்டும்தான் வாழ முடியும் என்பதை ஏற்றுக் கொண்டுள்ள இக் கால கட்டத்தில் இன்னும் சில வதந்திகளையும் கப்ஸாக்களையும் அவிழ்த்து விடுகின்றனர் ஓர் சில போலி வாதிகள்.


மனிதன் தாங்கிக் கொள்கின்ற அளவுக்கு வெப்பமும்இ குளிரும் பூமியில் மட்டும் தான் உள்ளது. சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதர்களைக் கரிக்கட்டையாக்கிவிடும். சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும்.

உயிர் வாழ அவசியமான காற்றும் பூமியில் தான் இருக்கிறது. ஒட்சிசன் துணையுடன் சில நாட்கள் விண்வெளியில்இ அல்லது சந்திரனில் தங்குவதை வாழ்வது என்று சொல்ல முடியாது. அதைவிட மிக முக்கியமான விடயம் தான் சூரியனிலிருந்து பூமி 23 டிகிரி சாய்வாகச் சுழல்கிறது. இதனால் தான் கோடைஇ குளிர்இ வசந்தம்இ இலையுதிர் காலங்கள் ஏற்படுகின்றன.


இப்படிப் பல விஞ்ஞான ஆதாரங்கள் காணப்படுகின்ற போது வேற்றுக்கிரகங்களில் மனிதர்களைப் போன்றவர்கள் வாழ்கின்றார்கள் என்று கூறுகின்ற போலி வாதங்கள் நகைப்புக்குரியதாகும்.


ஆனால் இறைவன் இதனைப் பற்றி 1400 வருடங்களுக்கு முன்னால் தெட்டத் தெளிவாக தன்னுடைய திருமறையில் சொல்லிவிட்டான்.


மனித இனத்தைப் படைக்கும் முன்னால் இறைவன் தன் வானவர்களிடம் இப் பூமியில் மனித இனத்தைப் படைக்கப் போகின்றேன் என்று கூறியபோது வானவர்கள் சர்சைப்பட்டுக் கொண்டார்கள். இவ்விடத்தில் இறைவன் தன்னுடைய பிரதிநிதியை பூமியில் படைக்கப் போகின்றேன் என்று கூறுகின்றான்இ இவ்விதத்தில் இறைவன் பூமியைச் சுட்டிக் காட்டுகின்றான். இதில் இருந்து விளங்குவது பூமியில் தான் மனிதனும் ஏனைய உயிரினங்களும் உயிர் வாழ முடியும்.

திருமறையின் (2:36இ 7:10இ 7:24இ 7:25இ 30:25) இவ் வசனங்களில் இறைவன் பூமியில் தான் உயிரினங்கள் வாழ முடியும் என்று குறிப்பிடுகின்றான். இதன் மூலம் வேற்றுக்கிரகங்களில் உயிரினங்கள் வாழ முடியாது என்பது நிரூபனமாகின்றது.

இதே போன்று பூமியின் ஆழத்தில் கூட உயிர் வாழ முடியாது என்பதனைக் குர்ஆன் தெளிவாகக் கூறிவிட்டது. திருமறையின் 17:37 வசனத்தில் 'நீ பூமியைப் பிளந்து மலையின் உயரத்தை அடையவில்லை' இதில் அடங்கியுள்ள அறிவியல் உண்மை என்னவென்றால். பூமியின் உண்மையான ஆழத்தை மனிதனால் அடைய முடியாது என்பதனை இக்குர்ஆன் தெளிவு படுத்துகின்றது.


பூமியின் குறுக்களவு 12756 கி.மீ.ஆகும். அதாவது பூமியின் ஒரு முனையிலிருந்து அதன் எதிர்முனை வரையுள்ள தூரம் (விட்டம்) இதுவாகும். இதில் மனிதன் சென்றடைந்துள்ள தூரம் 3.3 கிமீ மட்டுமே. தென் ஆபிரிக்காவில் உள்ள உலகில் மிகப் பெரிய சுரங்கம் எனப் படும் டிரான்ஸ் வால் பாக்ஸ்பர்க் என்ற இடத்திலுள்ள சுரங்கத்தின் ஆழம் இதுதான். உண்மையில் இது கூடச் சரியான அளவு என்று சொல்ல முடியாது. ஏனெனில் இந்தப் பகுதி கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து அளவிட்டால் இந்தச் சுரங்கத்தின் ஆழம் 1700 மீட்டர் ஆகும். இதனை நோக்குவோமானால் உண்மையாக மனிதன் 2 கிமீ கூட பூமியின் ஆழத்துக்கு செல்ல வில்லை.

உலகில் மிக உயரமான இமய மலையின் உயரம் 9 கிமீ ஆகும். இந்த 9 கிமீ ஆழத்திற்கு அதாவது மலையின் உயரத்தின் அளவுக்குப் பூமியில் மனிதன் செல்ல முடியாது என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கிறார்கள். பூமியின் மேற்பரப்பில் சராசரியாக 40 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தையே மனிதனால் தாங்க முடியாது. கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் ஆழமுள்ள மேற்கண்ட சுரங்கத்தில் 57 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உள்ளது. தொழிலாளர்களுக்கு இந்த வெப்பம் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் அதன் அருகிலுள்ள பகுதியில் குளிரூட்டப்பட்டுள்ளன. பூமிக்கு அடியில் 700 மீட்டர் கடந்து விட்டாலே காற்று முகத்தைச் சுட்டுப் பொசுக்கும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எனவே மலையின் உயரமான 9 கிமீ அளவுக்குப் பூமிக்குள் செல்வது சாத்தியமே இல்லை. மேலும் பூமியின் ஆழத்தில் செல்லச் செல்ல புவி ஈர்ப்பு விசையும் அதிகரிக்கின்றது. இதன் காரணமாகவும் பூமியின் ஆழத்தில் மனிதன் செல்லவோ வசிக்கவோ முடியாது.


இப்படிப் பலவாறாக பூமியல்லாத இடங்களை பார்த்தாலும் அங்கு மனிதன் வாழ்வது சாத்தியமில்லை என்பது நிரூபனமாகின்றது.


எனவே மக்களுக்கு மத்தியில் இப்படிப்பட்ட வதந்திகளைப் பரப்புவதை சஞ்சிகைகளும்இ பத்திரிகைகளும் நிறுத்தி உண்மையான விடயங்களை யூகமின்றி பிரசுரிக்குமாறு வேண்டிக் கொள்கின்றோம்.


1 comment:

  1. இப்படியான ஆய்வுகள் மக்களுக்கு சொல்லப் படவேண்டும்

    ReplyDelete